ARTICLE AD BOX
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்பட்டது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 12) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 360 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 798 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 384 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

7 months ago
69









English (US) ·