மாடு கூட தாய்மொழியில்தான் கத்தும்.. வடிவேலு பரபரப்பு பேச்சு!

2 weeks ago 13
ARTICLE AD BOX

மும்மொழிக் கொள்கை பிரச்னைக்கு இடையே, காக்கா, கிளி, மாடு எல்லாம் அதன் தாய்மொழியில்தான் கத்துகின்றன என நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

சென்னை: சென்னையின் யானைக்கவுனியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி, திமுக சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம் மற்றும் நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய வடிவேலு, “தமிழ்நாடு முதலமைச்சரால் பயனடையாத மக்களே கிடையாது. விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ வலிகள் வருகிறது. ஆனால், அவை எல்லாவற்றையும் சிக்சர்கள் அடிப்பது போல முதலமைச்சர் அடித்து வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் இல்லை என்றால், தமிழே இன்று இருந்திருக்காது. காக்கா, கிளி, மாடு எல்லாம் அதனுடைய தாய்மொழியில்தான் கத்துகின்றன. அவற்றையெல்லாம் மாறி மாறி கத்தச் சொன்னால் கத்துமா? அது வேண்டாம். யார் யார் எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ, கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.

Vadivelu about Bilingual policy

நாட்டிற்கு ஏதேதோ அடையாளமாக இருக்கிறது, எங்களுடைய தமிழ்நாட்டிற்கு தமிழ்தான் அடையாளம். 5,000 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி, முதலமைச்சர் ஸ்டாலினின் பார்வையில் உள்ளது. எங்கள் தமிழ்மொழி உலகுக்கு எல்லாம் கற்றுத் தரும் மொழி. ஆங்கிலம் வெறும் கனெக்டட் மொழி மட்டும்தான்.

இதையும் படிங்க: இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!

சின்ன சின்ன வார்த்தைக்கு அர்த்தமுள்ள தங்கமான மொழி தமிழ் மொழி. நான் அரசியல் பேசவில்லை, என்னுடைய மொழியைப் பற்றிதான் பேசுகிறேன். இது திமுக மேடை மட்டுமல்ல, தமிழரின் மேடை, தமிழ்நாட்டின் மேடை. முதலமைச்சர் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் எந்த பாதிப்பும் வராது.

முதலமைச்சர் ஒவ்வொரு வீட்டுக்கும் மூத்த தகப்பன். முதலமைச்சருக்கு தூக்கமே கிடையாது. இரண்டு மணிநேரங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு தூங்குகிறார், எந்த நேரமும் பணியில்தான் உள்ளார்” எனத் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டில் 200 சீட்டுக்கு மேல் பெற்று திமுக ஆட்சியைப் பிடிக்கும், மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்” எனத் தெரிவித்தார்.

  • Director Ameer connection to drug case இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!
  • Continue Reading

    Read Entire Article