மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பாதிரியார்.. பள்ளி விடுதியில் நடந்த பயங்கரம்!

1 day ago 6
ARTICLE AD BOX

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே பள்ளி மாணவர்கள் விடுதி புனித சேவியர் பிரிட்டோ என்ற பெயரில் விடுதி உள்ளது.

இதையும் படியுங்க: வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…

இதில் 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடியைச் சேர்ந்த பாதிரியார் குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.

Priest Arrest in Sexaul Abuse Case

இந்த நிலையில் விடுதி வார்டன் குழந்தை நாதன், அவரது நண்பர், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முருகன் கோட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டு, பாதிரியாருக்கான படிப்பை படித்து வருகிறார்.

விடுமுறை நாட்களில் விடுதிக்கு வரும் சுந்தர்ராஜன் விடுதி வார்டன் குழந்தை நாதன் அறையில் தங்கி உள்ளார். இந்த நிலையில் சுந்தர்ராஜன் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவர்கள் குழந்தை நாதனிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் மாணவர்கள் அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

Priest Sexual Torture to School Students in Hostel

விசாரணையில் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராகுல் காந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதி வார்டன் குழந்தைநாதன் அவரது நண்பர் சுந்தர்ராஜன் ஆகிய இருவரையும் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதன் பின்னர் போலீசார் விசாரணையில் உண்மை இருப்பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…
  • Continue Reading

    Read Entire Article