ARTICLE AD BOX
பிரபல நடிகை ஒருவர் மத்திய இணையமைச்சராக்க பாஜக முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாயுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி 90 மற்றும் 2000ஆம் காலக்கட்த்தில் சினிமாவில் பெரும் புகழை சேர்த்தவர் நடிகை மீனா.
ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், அஜித், விஜய் என அத்தனை நடிகர்ளுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என தென்னிந்திய மொழி சினிமாவில் கோலோச்சினார்.
இதையும் படியுங்க: சொகுசான முதல் வகுப்பில் அடைக்கப்பட்ட ஸ்ரீகாந்த்? சிறையில் இத்தனை கவனிப்புகளா?
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே 2009ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உண்டு. நைனிகா விஜய் நடித்த தெறி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
2022ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் வித்யாசாகர் உயிரிழக்க, மீனா மீண்டு வருவதற்கு சில காலம் எடுத்தது.
தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வரும் மீனா, டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றது பேசுபொருளானது.
கலா மாஸ்டர் தான் அமைச்சர்கள் பங்கேற்ற விழாவுக்கு அழைத்து சென்றது என கூறப்பட்டாலும், மீனாவுக்கு அரசியல் ஆசை உள்ளது என கூறப்படுகிறது.
அமைச்சரின் உதவியால் பாஜகவில் அவர் இணைய போகிறார் என கூறப்பட்டது. அதையும் மறுத்த வந்தார் மீனா. ஆனால் திடீரென டெல்லிக்கு விசிட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவர் சந்தித்து பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக மூத்த தலைவர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும், சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பான அறிவிப்பு மேலிடத்தில் இருந்து வரலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீனா தரப்பு இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.