ARTICLE AD BOX
இரண்டாவது திருமணம்?
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியின் நடுவராக திகழ்கிறார். இவர் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது. ஜாய் கிரிஸில்டாவே இப்புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும் ஜாய் கிரிஸில்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை எனவும் கூறியிருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ்ஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. இந்த நிலையில் ஸ்ருதியை முறையாக விவாகரத்து செய்யாமலே ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் எழுந்தது.
இதனிடையேதான் “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியில் குரேஷி, மாதம்பட்டி ரங்கராஜை குறிப்பிட்டு, “அவரை பார்த்து நீதி என்று சொல்லிவிட்டு 10 செகண்ட் சிரிக்காம இருங்க பார்க்கலாம்” என கேலி செய்தார். குரேஷி மறைமுகமாக மாதம்பட்டியார் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை கலாய்க்கிறார் என பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது மற்றொரு வீடியோ ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜை இமிடேட் செய்துள்ளார்.
ஜாய் கிரிஸில்டா புகார்…
மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை எனவும், ஆனால் அவர் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், இதனை கேட்டபோது அவர் தன்னை தாக்கியதாகவும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை “ஹே பொண்டாட்டி” என்று கொஞ்சுவது போன்ற பழைய வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் அதனை இமிடேட் செய்து குரேஷி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதன் கம்மண்ட் பகுதியில் மாதம்பட்டி ரங்கராஜ், “டேய் ரொமான்ஸ் பத்தலடா, இரண்டு வாரம் என் கிட்ட டிரைனிங் எடுத்துக்கோ” என கம்மண்ட் செய்துள்ளார். குரேஷியின் இந்த வீடியோவில் பலரும், “உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி”, “வேற லெவல்” என கம்மண்ட் செய்து வருகின்றனர்.
