மாதம்பட்டியார்  திருமணம் செய்துகொண்ட கிரிஸில்டாவின் முதல் கணவர் இந்த பிரபல இயக்குனரா?

1 month ago 14
ARTICLE AD BOX

இரண்டாவது திருமணம்

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட சம்பவம்தான் தற்போது பேசுபொருளாக ஆகியுள்ளது. பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் 2019 ஆம் ஆண்டு “மெகந்தி சர்க்கஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் தற்போது நடுவராக வலம் வருகிறார். மிகவும் பிரபலமான சமையல் கலைஞரான இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதனிடையேதான் இவரும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. 

ஆனால் இது குறித்து இவர்கள் இருவரும் எந்த விளக்கமோ அல்லது மறுப்போ கூட தெரிவிக்கவில்லை. ஸ்ருதியை விட்டு பிரிந்து ஜாய் கிரிஸில்டாவை விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின.

Madhampatti rangaraj new wife joy crizildaa first husband is the famous director

இந்த நிலையில் ஒரு கோயிலில் மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிஸில்டாவும் திருமணம் செய்துகொண்டனர். இப்புகைப்படங்களை ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு வியப்பையும் அதே நேரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா என்பவர் யார்? அவரது முதல் கணவர் குறித்தும் பார்க்கலாம்.

இவரது முதல் கணவர் இந்த இயக்குனரா?

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா “ஜில்லா”, “மிருதன்”, “வேலைக்காரன்”  போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது முதல் கணவரின் பெயர் ஜே ஜே ஃப்ரெட்ரிக். 

Madhampatti rangaraj new wife joy crizildaa first husband is the famous director

ஜோதிகா முன்னணி கதாநாயகியாக நடித்த “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை இயக்கியவர்தான் ஜே ஜே ஃப்ரெட்ரிக். கடந்த 2018 ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக்கும் ஜாய் கிரிஸில்டாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில்தான் 2023 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிஸில்டாவும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

  • Madhampatti rangaraj new wife joy crizildaa first husband is the famous directorமாதம்பட்டியார்  திருமணம் செய்துகொண்ட கிரிஸில்டாவின் முதல் கணவர் இந்த பிரபல இயக்குனரா?
  • Continue Reading

    Read Entire Article