மாநில அரசியலுக்கு திரும்பும் கனிமொழி? அறிவாலயத்தில் அமர வைத்து அழகு பார்த்த CM!

6 days ago 13
ARTICLE AD BOX

திமுக முகமாக இருக்கும் கனிமொழி, தேசிய அரசியலில் தனது அனல் பறக்கும் பேச்சால் கவனத்தை ஈர்த்து வருகிறார். மக்களுக்கான பிரச்சனையில் அதிகம் கவனம் செலுத்தும் கனிமொழி, நாடாளுமன்றத்தில் நேரம் கேட்டு தமிழக உரிமைக்காக போராடி வருகிறார்.

சிறந்த பெண் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றவர் கனிமொழி. இந்த முறை 2026 தேர்தலில் அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: எங்கு சென்றது வாடகை வாய்கள்? வடை சுடும் திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? அண்ணாமலை கேள்வி!

முன்னதாக கனிமொழிக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அவருக்காக பதவி உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்காக தனி அலுவலக அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்த அறையை முதலமைச்சசர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கனிமொழிக்கு புதிய பதவி அளிக்கப்பட்டு, அவர் வகித்த துணை பொதுச்செயலாளர் பொறுப்பை உதயநிதிக்கு வழங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல பொதுச்செயலாளர் பதவியில் உள்ள துரைமுருகனை தூக்கிவிட்டு டிஆர் பாலுவுக்கு அந்த பதவி தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 2026 தேர்தல் வரும் முன் பல்வேறு மாற்றங்கள் திமுகவில் நிகழ உள்ளன.

இது தவிர மாநில பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்படுவதால், வரும் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கனிமொழியை தமிழக அரசியலில் கொண்டு வர வேண்டும் என கழக குரல்கள் எழுந்ததால் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

  • rajinikanth coolie chikitu song surprise video released ரஜினிகாந்துடன் நடனமாடப்போகும் மாஸ் நடிகர்? சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்ட கூலி படக்குழு!
  • Continue Reading

    Read Entire Article