ARTICLE AD BOX
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இதையும் படியுங்க: முடி காணிக்கை செலுத்திய துணை முதலமைச்சரின் மனைவி.. மகனுக்காக மொட்டை போட்டு வழிபாடு!
அக்கட்சிக்கு சீட் ஒதுக்கவில்லை என்றாலும், ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக உறுதியளித்திருந்தனர். அந்த வகயைல் கமல்ஹாசன் வரும் ஜூலை மாதம் எம்பியாக பதவியேற்க உளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த மநீம துணை தலைவர் தங்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசனை மாநிலங்களவைக்கு அனுப்ப மநீம நிர்வாகிகள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் ஜூலை மாதம் அவர் பதவியேற்பார் என கூறியுள்ளார்.