ARTICLE AD BOX
வேலூர் மலைகோடியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில், தமிழகத்தில் அனைவரும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் என்னை அவர்கள் பெண்ணாக நினைத்து அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
முன்னாள் பிரதமர் வி.பி.நரசிம்மராவ் நினைவு நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, முன்னாள் பிரதமர் வி.பி.நரசிம்மராவிற்கு 17 மொழிகள் தெரியும் இப்படித்தான் அவர் உயர்ந்த மனிதரானார். அதனால் நாம் ஏன் இந்தி கற்க கூடாது? என பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, சந்திரபாபு நாயுடு எப்போ எந்த நேரத்திற்கு என்ன பேசுகிறார் என்பதை அவரே மறந்து விடுவார்.

ஒரு காலத்தில் விபி.நரசிம்மராவை திட்டுவார், இங்கிலீஷ் படிப்பது வேஸ்ட் என்பார். ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்த போது எல்லா ஏழை மாணவர்களுக்கும் ஆங்கிலம் முக்கியம் என்பதை கருதி சிபிஎஸ்சி சிலபஸ் கொண்டு வந்தோம் அதற்கு சந்திரபாபு நாயுடு எவ்வளவோ பிரச்சனை கொடுத்தார் கோர்ட்டுக்கும் போனார்.
இன்னைக்கு தேர்தலுக்காக பிஜேபியோடு கூட்டணி வைத்த உடனேயே ஹிந்தி முக்கிய, ஹிந்தியை எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என பேசுகிறார்.

தமிழில் சொல்வது போல் அவருக்கு மானம், வெட்கம், சூடு, சொரணை எதுவுமே இல்லை. பவருக்கு வருவதற்காக எந்த நேரத்திற்கு என்ன பேசுவது என்று அவருக்கே தெரியாது என கூறினார். மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறிங்களா என கேட்டதற்க்கு, அப்படினா என கூறினார்.
