ARTICLE AD BOX
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மூணாறில் நல்லதண்ணி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?
கம்ப்யூட்டர் சென்டருக்கு அடிக்கடி வந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்த கணேஷ், ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
அப்படி ஒருநாள் உல்லாசமாக இருந்த போது, இளம்பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார் கணேஷ். இந்த நிலையில் இளம்பெண்ணுக்க வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
இதை இளம்பெண், கணேஷிடம் கூற, ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த உல்லாச வீடியோவை நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் திருமணத்தை மாப்பிள்ளை உடனே நிறுத்தியுள்ளார்.

இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.
