ARTICLE AD BOX
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம் சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமையுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்
இந்த நிலையில் படத்தில் வெளியான கனிமா பாடல் உலகம் முழுவதும் படு வைரலாகி வருகிறது. பாடலும், வரிகளும், நடனதும், குறிப்பாக பூஜா ஹெக்டே ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்து ரீல்ஸ் உருவாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்க: அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!
அதில் பிரபலமும் அடங்குவர். அந்த வகையில் லப்பர் பந்து படத்தில் மனம் கவர்ந்த மாமியாராக வலம் வந்த நடிகை சுவாசிகா தற்போது கனிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது படுவைலராகி வரும் நிலையில், அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், நடிகர் ஹரிஷ் கல்யாணை டேக் செய்து, உங்க மாமியாரை பாருங்க என பதிவிட்டுள்ளார்.
லப்பர் பந்து படத்தில் ஹரிஸ் கல்யாணின் மாமியாராக சுவாசிகா நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 months ago
83









English (US) ·