மாமியார் மீது தீராத மோகம்… நள்ளிரவில் மருமகனுக்கு ஏற்பட்ட சபலம் : விடிந்ததும் ஷாக்!

1 month ago 26
ARTICLE AD BOX

மாமியாரை கற்பழிக்க முயன்ற மருமகனை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 51 வயது. கூலித் தொழிலாளியான இவரது மனைவி இறந்து விட்டார். வாலிப வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்களது வீட்டிலேயே தொழிலாளியின் மாமியாரும் வசித்து வருகிறார்.

இதையும் படியுங்க: நண்பனை காப்பாற்ற சென்ற சக நண்பன் கொலை… சிக்கனால் நடந்த விபரீதம்.. கோவையில் ஷாக்!

75 வயதான அவர் மருமகன் மற்றும் பேரனுக்கு சமைத்து கொடுத்து வந்தார். மகள் இல்லாத நிலையில் மருமகனை மகனாக நினைத்து சமைத்து கொடுத்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய மருமகன் மணிகண்டன் நேற்று இரவு வீட்டிற்கு போதையில் வந்து உள்ளார். இரவில் அனைவரும் அவரவர் அறையில் படுத்து தூங்கினர்.

இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென்று போதையில் இருந்த மருமகன், மாமியார் அறைக்கு சென்று உள்ளார். அங்கு 75 வயது ஆனவர் என்றும் பாராமல் அவரிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார்.அக்கம், பக்கத்தினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வேறொரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்த பாட்டியின் பேரன் திடுக்கிட்டு விழித்தார். பாட்டி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது நிலைமையை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே ஆத்திரத்தில் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் தொழிலாளி காயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

son in law arrest

இந்த சம்பவம் குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மாமியாரை கற்பழிக்க முயன்ற மருமகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Sarathkumar nagma was in relationship and Bhagyaraj tried to impress nagma சரத்குமார்-நக்மா காதல்? குறுக்கே புகுந்து வலை வீசிய பாக்யராஜ்? இப்படி எல்லாம் நடந்திருக்கா!
  • Continue Reading

    Read Entire Article