ARTICLE AD BOX
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவும் இணைந்து கூட்டு செயற்கைக்கோளாக உருவாகியுள்ள நிசார் தற்போது விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோவின் GSLV F16 என்ற ராக்கெட்டின் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஹரீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து தற்போது விண்ணில் பாய்ந்தது. இதன் எடை 2,392 கிலோ என கூறப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியை துல்லியமாக கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது. ரூ.12,500 கோடி மதிப்புள்ள இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் மிக விலை உயர்ந்த செயற்கைக்கோள் எனவும் கூறுகின்றனர். ராக்கெட்டின் அடுக்குகள் பிரிந்ததாக விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
