ARTICLE AD BOX
NEEK Vs DRAGAN
நடிகர் தனுஷ் இயக்கி தயாரித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளிவந்த இப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் படம் வசூலில் திணறி வருகிறது.
மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டிராகன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பி வருவதால் தனுஷின் படம் கலவையான விமர்சனத்தை பெற்று தியேட்டரில் காத்து வாங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்க: ‘டிராகன்’ பட நடிகை போனில் அந்த மாதிரி மீம்..ஷாக் ஆன பிரதீப் ..நெட்டிசன்கள் விமர்சனம்.!
தற்போது 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் NEEK திரைப்படம் 12.5 கோடி வசூலை மட்டுமே அடைந்துள்ளது,ஆனால் டிராகன் திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து இதுவரை 50 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.