ARTICLE AD BOX
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை தெளிவுபடுத்துவர்கள். மக்கள் மன்றத்தில் நாம் வைப்போம். எந்த கூட்டணியும் முழுமை அடையவில்லை.
நேற்று திருமாவளவன் சொல்லும்போது பேச வேண்டிய இடத்தில் மீசையை முறுக்கி பேசுவேன் என்று சொல்கிறார். நாங்கள் அதை எதிர்பார்த்து இருக்கிறோம்.
கள் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு. தடையை மீறி போராட்டம் செய்ய விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் காவல்துறையை மீறி கள் இறக்குவதில் உடன்பாடில்லை.
நாங்கள் பானையை உடைத்து கள் குடிக்கப் போவதில்லை. சீமான் செய்வது அவரது ஸ்டைல்.பாஜக ஒரு பொறுப்பான கட்சி. எங்கள் ஆதரவு கள் மீதான தடையை நீக்குவது.
ராமதாஸ் அய்யாவின் மீது மிகப்பெரிய மரியாதையை பிரதமர் வைத்து இருக்கிறார். வீரமணி அண்ணனின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். அவர் கண்ணாடி கூண்டில் உட்கார்ந்து கல் எரிகிறார்
திமுகவை பொறுத்தவரை மைனாரிட்டியாக இருக்கும்போது கூட காங்கிரசுக்கு எதுவும் தரவில்லை. திமுக அரசியல் பாடம் எங்களுக்கு எதிர்க்க வேண்டாம்.
தமிழ்நாட்டில் இந்து முன்னணி இந்து மக்களுக்காக பேசும் அமைப்பு. அவர்களுடன் முருகன் மாநாடு ஏற்பாடு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற அனுமதி வாங்கி நடத்துகிறார்கள்.
முருகன் பெயரை எடுத்தால் திமுக தலைவர்கள் ஏன் பதற்றம் அடைகிறார்கள். உயர்நீதிமன்றம் சொன்ன பிறகும் அமைச்சர் பேசுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
பிரதமர் சைப்ரசுக்கு முதல் முறையாக சென்று உள்ளார். இந்தியா சிறப்பு அழைப்பாளராக ஜி 7 மாநாட்டுக்கு செல்கிறார். இன்று பிரதமர் பொறுத்தவரை அமைதியாக இருக்க சொல்கிறார்.
பிரதமர் வாதம் ஜி 7 மாநாட்டில் முக்கியமானதாக இருக்கும். பாமக ஒரு கருத்து சொல்கிறார். கூட்டணி ஆட்சியில் இடம்பெறும் என சொல்கிறார். இன்று அதைப்பற்றி பேச வேண்டியது இல்லை. தேர்தல் சூடு வரவில்லை . வந்தும் பார்க்கவில்லை என பேசினார்.
 
                        4 months ago
                                45
                    








                        English (US)  ·