ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் சுயம்பாக கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகர் அஜித்குமார். ஏராளமான ரசகிர்கள் படையுடன், தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் அஜித், கார் ரேஸிங்கிலும் ஈடுபடுவதுண்டு.
இதையும் படியுங்க: கர்மா இஸ் பூமராங்- சமந்தாவுக்கு சாபம் விட்ட பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவி? என்னவா இருக்கும்!
ஒரு பக்கம் சினிமா, மறுப்பக்கம் தன்னுடைய கனவு என அஜித் தனது பாணியில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது,
அவ்வப்போது சினிமாவுக்கு பிரேக் எடுத்துவிட்டு, கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வரும் அஜித், தற்போது நெதர்லாந்தில் நடந்து வரும் ஐரோப்பிய GT4 ரேஸில் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே பந்தயத்தில் அஜித் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. உடனே இணையத்தில் அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகின.
விபத்தில் காரின் முன்பகுதி கடும் சேதம் அடைந்துள்ளது. டயர் வெடித்ததும் அஜித் உடனே டிராக்கில்இருந்து வெளியேறி காரை மெதுவாக எடுத்து சென்றுள்ளார்.
இந்த விபத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

5 months ago
55









English (US) ·