ARTICLE AD BOX
செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில் மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் சேர்க்கப்பட்டார்.
இதையும் படியுங்க: தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை… ரிசல்ட்டை பார்த்து கண்கலங்கிய பெற்றோர்!
இதனிடையே திமுக அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதியின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கைவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனியர் அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
