ARTICLE AD BOX
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்து பேசிய போது, உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம். நீங்களும் ஓசியாத்ததான் ஏறி போகப்போறீர்கள் என பேசினார்.
இதையும் படியுங்க: மருமகனுடன் உல்லாசமாக இருந்த அத்தை.. குப்பை மேட்டில் கிடந்த சடலம் : தூக்கி வாரிப்போடும் சம்பவம்!
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, திமுக எம்எல்ஏ பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. தற்போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில்,பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில் தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?
வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

4 months ago
39









English (US) ·