மீண்டும் கஜினியாக மாறும் சூர்யா? கதையை ஓபனாக போட்டுடைத்த வெங்கி அட்லூரி!

16 hours ago 7
ARTICLE AD BOX

சஞ்சய் ராமசாமி…

2005 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான “கஜினி” திரைப்படம் சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சூர்யாவிற்கு பல  படங்கள் ஹிட் அடித்திருந்தாலும் “கஜினி” திரைப்படம் போன்ற ஒரு மாபெரும் வெற்றியை எந்த திரைப்படமும் அவருக்குத் தரவில்லை. அந்த வகையில் “கஜினி” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் ஒரு மைல் கல்.

suriya 46 movie suriya character revealed by venky atluri

இத்திரைப்படத்தில் சூர்யா சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனக்கு என்ன நடந்தது என்பதை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை மறந்துவிடும் Short Term Memory Loss- ஆல் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாக அதில் நடித்திருந்தார். மிகவும் அசத்தலாகவும் மிரட்டலாகவும் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரமாக அது அமைந்தது.

மீண்டும் சஞ்சய் ராமசாமியாக மாறும் சூர்யா?

“ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜியின் “கருப்பு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வெங்கி அட்லூரி, சூர்யாவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் கதையை குறித்து பேசியுள்ளார். 

suriya 46 movie suriya character revealed by venky atluri

அதாவது உணர்வுப்பூர்வமான ஒரு குடும்ப செடிமன்ட் கதையை வெங்கி அட்லூரி சூர்யாவிடம் கூறினாராம். அந்த கதையின் கிளைமேக்ஸ் என்ன என்பது கூட முடிவு செய்யவில்லை, ஆனால் சூர்யாவுக்கு அந்த கதை மிகவும் பிடித்துவிட்டதாம். மேலும் பேசிய அவர், இத்திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கஜினியின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

  • suriya 46 movie suriya character revealed by venky atluri மீண்டும் கஜினியாக மாறும் சூர்யா? கதையை ஓபனாக போட்டுடைத்த வெங்கி அட்லூரி!
  • Continue Reading

    Read Entire Article