ARTICLE AD BOX
பட வாய்ப்புகள் அமையாமல் ட்ரோலுக்குள்ளான அப்பாஸ்
“காதல் தேசம்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் அப்பாஸ். தனது முதல் திரைப்படத்திலேயே அப்போதைய இளம்பெண்களின் மத்தியில் சாக்லேட் பாய் என்று பெயர் பெற்ற அப்பாஸ், “காதல் தேசம்” திரைப்படத்தை தொடர்ந்து “பூச்சுடவா”, “ஜாலி” போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உயர்ந்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துப்போனது. இதன் காரணமாக ஹார்பிக் போன்ற விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இதனால் அவரை பலரும் ட்ரோல் செய்யத் தொடங்கினர். மேலும் செலப்ரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் போது அப்பாஸுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது. இவ்வாறு பல கசப்பான அனுபவங்களின் காரணமாக அப்பாஸ் தனது குடும்பத்துடன் மொத்தமாக சினிமாவை விட்டும் இந்தியாவை விட்டும் விலகி நியூஸிலாந்தில் செட்டில் ஆகி விட்டார்.
ரீ என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்!
இந்த நிலையில் அப்பாஸ் 10 வருடங்களுக்குப் பின் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. அதாவது மரியா ராஜா இளஞ்செழியன் என்பவரின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் அப்பாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

நடிகர் அப்பாஸ் கடைசியாக 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் “Pachakkallam” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நடிக்கவுள்ளார்.
