ARTICLE AD BOX

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவரைத் தாக்கிய நோயாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் பரத். 35 வயதான இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்து உள்ளார். இந்த சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆன பரத், வீட்டுக்குச் சென்று உள்ளார்.
இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சென்று கொண்டே இருந்து உள்ளார். அந்த வகையில், இன்று சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த பரத், அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஹரிஹரன் என்பவரை முகத்தில் குத்தி உள்ளார்.
பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார். இதில், காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, பரத் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி, வண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை போலீசார் பரத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முன்னதாக, இன்று காலையில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் கத்தியால் குத்தினார். இதனையடுத்து, மருத்துவர் பாலாஜி சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆள்வதால் தனிப்பட்ட வருத்தமா? மருத்துவருக்கு கத்திக்குத்து.. கிளம்பும் எதிர்ப்பு!
மேலும், மருத்துவரைத் தாக்கிய இளைஞரை பிடித்த பொதுமக்கள், போலீசில் ஒப்படைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் ஒரே நாளில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The station மீண்டும் மருத்துவர் மீது தாக்குதல்.. அதுவும் அரசு மருத்துவமனையில் தான்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.