ARTICLE AD BOX
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.
வைசாக்: தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக அறியப்படுபவர் மீனாட்சி சௌத்ரி. இந்த நிலையில், இவரை ஆந்திரப் பிரதேச அரசு, மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக, நடிகைகள் சமந்தா, பூனம் கவுர் போன்ற நடிகைகளை அரசு ஏற்கனவே பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளன. அதேபோல், மீனாட்சிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக ரசிகர்கள் அதிர்ச்சியுடன் ஷேர் செய்து வந்தனர். இதனால் மீனாட்சி செளத்ரி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனார்.
ஆனால், ஆந்திரப் பிரதேச அரசில் உள்ள உண்மை சரிபார்ப்புப் பிரிவு, இந்தத் தகவலை மறுத்தது. அது மட்டுமல்லாமல், நடிகை மீனாட்சி சௌத்ரியை பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததாக வரும் செய்திகள் பொய் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து, ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளனர்.
யார் இந்த மீனாட்சி செளத்ரி? ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரி, தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். கடந்த 2018ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்ற இவர், பல் மருத்துவம் படித்துள்ளார். அது மட்டுமன்றி, இவர் மாநில அளவில் நீச்சல் போட்டியிலும், பேட்மிண்டன் போட்டியிலும் வெற்றி பெற்றவராக உள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!
இந்தி மற்றும் தெலுங்கில் சில சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்த இவருக்கு, தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், முதலில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக, வெங்கட் பிரபுவின் தி கோட் படத்தில் நடித்திருந்தார். இருப்பினும், துல்கர் சல்மான் உடன் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படமே மீனாட்சியை ஹைலைட்டாக்கியது.

8 months ago
70









English (US) ·