ARTICLE AD BOX

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் படு பிஸியாக வலம் வந்தவர்.
அதனால் நடிகை மீனாவை சுற்றி ஆரம்ப காலத்திலேயே பல கிசுகிசுக்கள் வெளியாகின. இவர் பிரபுதேவாவுடன் தொடர்ச்சியாக படம் நடித்ததால் இருவருக்கும் காதல் என்று பேசப்பட்டது.
இதையும் படியுங்க : ஆதிக் படத்துல வர ரம்யா மாதிரியே.. விசு படத்துல வர உமாவை கவனிச்சிருக்கீங்களா? இதுதான் காரணம்!
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபுதேவா இளம் வயதிலேயே திருமணம் செய்ததால் கடைசியல் மீனா வேண்டாம் என்றே ஒதுங்கினார்.
ஆனால் பிரபுதேவாவுடன் இன்னும் நட்பு உள்ளது. அதே போல கன்னடத்தில் ரவிச்சந்திரன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் சுதீப் என பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் மீனா.
கடைசியில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்த மீனாவுக்கு நைனிகா என்ற குழந்தை உள்ளது. அவரும் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் முதன்முறையாக பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் யாரும் எதிர்பாரா விதமாக, நடிகைகள் ரோஜா, மீனா, ரம்பா, உமா மகேஷ்வரி, சங்கீதா, ஸ்ரீதேவி பங்கேற்றனர்.
பிரபுதேவாவுடன் நடிகைகள் ஜோடி போட்டு ஆடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து புகைப்படங்களை பகிர்ந்த மீனா, அன்பு அரவணைப்பு மற்றும் பழைய நினைவுகளுடன் ஒரு அழகான மாலை என பதிவிட்டுள்ளார்.

நயன்தாராவுடன் திருமணம் வரை வென்ற பிரபுதேவாவின் காதல் கடைசியில் பிரிந்தது. அதே போல முதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா, நயனுடனான காதலும் முறிநத்தால் வடமாநிலத்திலேயே தங்கி தன்னுடைய படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே பிரபுதேவா அங்குள்ள ஒரு பெண் மருத்துவரை காதலித்து கரம்பிடித்தார். தற்போது மீண்டும் மீனாவுடன், பிரபுதேவா நடனமாடியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஆனால் அவர்கள் நட்பு ரீதியாகத்தான் பழகி வருகின்றனர் என மீனாவுக்கு ஆதவரான விமர்சனங்களும் வருகின்றன.
The station மீனாவுடன் மீண்டும் காதல்? கெட் டூ கெதரால் வந்த வினை! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.