ARTICLE AD BOX
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் கோடை விடுமுறை பயிற்சிக்காக சென்றார். அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் 15 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இதையும் படியுங்க: பெரிய கட்சியில் என்னை போட்டியிட அழைக்கிறார்கள்… விஜய்க்கு எதிராக நிற்பேன் : பவர் ஸ்டார் மீண்டும் பேச்சு!
இதில் பவன் கல்யாணின் மகனுக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு பவன் கல்யாண் சிங்கப்பூர் சென்று தனது மகன் மற்றும் மனைவி அன்னா லெஷ்னேவா ஐதராபாத்திற்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஷ்னேவா மகன் மார்க் ஷங்கருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். தனது மகனுக்கு சிறு காயத்துடன் உயிர் பிழைத்ததால் ஏழுமலையானுக்கு மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார். நாளை காலை மகனுடன் ஏழுமலையானை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற உள்ளார்.