ARTICLE AD BOX
தமன்னாவின் ஜிம் வீடியோ வைரல்
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.’கேடி’ படத்தில் வில்லியாக அறிமுகமாகி ‘வியாபாரி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்தார்.
இதையும் படியுங்க: CSK Vs RCB:17 வருட பீடையை தகர்க்குமா ரஜத் படிதார் அண்ட் கோ..களைகட்டும் சேப்பாக்கம்.!
பின்னர்,தனுஷின் ‘படிக்காதவன்’, கார்த்தியின் ‘பையா’, ‘சிறுத்தை’, ‘தில்லாலங்கடி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். தமிழைத் தவிர, தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தி, அங்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா,சமீபத்தில் ஜிம்மில் எடுத்த ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.வெள்ளை நிற டீ-ஷர்ட் மற்றும் நீல ஜிம்பேன்ட் அணிந்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் தனது டிரெய்னரிடம் ஓய்வு கேட்பது போலவும்,போதும் என்னால முடியல என்று சொல்லுகிறார்,இருந்தாலும் அவர் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து ஒர்கவுட் பண்ணுகிறரர்,தமன்னாவின் இந்த கடின உழைப்பை பாராட்டி,ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக பரப்பி வருகின்றனர்.
மேலும் உடலை பராமரிக்க விரும்பும் அனைவருக்கும் தமன்னா ஒரு ரோல் மாடல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.