முடிவுக்கு வருகிறது ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் வாழ்க்கை? ரசிகர்கள் அதிர்ச்சி!

4 weeks ago 21
ARTICLE AD BOX

போட்டி நடக்கும் ஒரு சில மணி நேரங்களுக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் நான்கு நாள் டெஸ்ட் தொடர் நேற்று இரண்டாவது போட்டியுடன் தொடங்கியது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென தொடரிலிருந்து விலகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வாகும் வாய்ப்பு நிச்சயம் என சொல்லப்பட்ட நிலையில், இப்படியான முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Shreyas Iyer says GOOD BYE to cricket.. Fans are shocked!

ஐயர், முன்பு முதுகு காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார். நீண்ட நேரம் மைதானத்தில் நின்று விளையாட முடியாத சூழ்நிலையால், இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவர், இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் நேரடியாக தெரிவித்துவிட்டு, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தேர்விலும் தன்னை சேர்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Famous director dies suddenly of heart attack.. Tragedy in the film industry! பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்.. திரைத்துறையில் அடுத்தடுத்து சோகம்!
  • Continue Reading

    Read Entire Article