ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது கார்த்திகேயபுரம் ஊராட்சியில் பஸ் நிறுத்த பகுதியில் பின்பக்கம் முள் செடி பகுதியில் பள்ளத்தில் மாணவர் ஒருவர் சடலமாக இருப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: 300 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது மாநாடு.. மதுரையில் பூமி பூஜையை நடத்திய தவெக.!!
சம்பவ இடத்திற்கு திருத்தணி போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த மாணவன் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? என்று அந்த பகுதியில் இருந்த இறந்த மாணவன் உடைமைகளையும் அருகில் இருந்த பொது மக்களையும் திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்து போன மாணவன் ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் தனியார் பார்மசி கல்லூரியில் படிப்பதாகவும் அந்த மாணவன் பெயர் சுதாகர் என்றும் வயது (22) என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரமாக இந்த பகுதியில் கஞ்சா போதையில் இருந்ததாகவும் மேலும் அவர் மது போதையா அல்லது கஞ்சா போதையா அவர் எப்படி இறந்தார் ? மர்மமான முறையில் இறந்தாரா என வழக்கு பதிவு செய்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
