ARTICLE AD BOX
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது கடைசி படம் என ஜனநாயகன் படத்தில் பணியாற்றி வந்தார். 95% படத்தின் பணிகள் நிறைவடைந்ததால் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக அக்டோபர் 27ஆம் தேதி முதல் மாநாட்டை நடத்தி அரசியல் கட்சிகளையே அலற விட்டார். தொடர்நது கோவை, மதுரையில் ரோடு ஷோ நடத்தினார்.
இதையும் படியுங்க: காவல் மரணங்களை ஏற்க முடியாது… உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா? கோர்ட் சரமாரிக் கேள்வி!
இதனிடையே பரந்தூர் மக்களை சந்தித்து, புதிய விமான நிலையம் அமைவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தீவிரமாக திமுகவை எதிர்த்து வரும் விஜய், தற்போது முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க முடிவெடுத்துள்ளார்.
பரந்தூர் மக்களுக்கு ஆதவராக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வலியுறுத்த அவர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு எதிராக எந்த ஒரு போராட்டமும் இன்னும செய்யவில்லையே என தவெகவுக்குள் பேச்சு அடிப்பட்டு வருவதால் விஜய் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து முதலில் குரலை பதிவு செய்ய வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளார்.

பரந்தூர் மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1,100 நாட்களுக்கு மேலாகவே போராடி வருகின்றனர். ஆனால் திமுக அரசோ மற்ற மாநிலங்கள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் சென்னை வளர்ச்சி பெறும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஆனால் மக்கள் எதிர்ப்பு மீறி அந்த திட்டம் வேண்டுமா என உதயநிதி ஸ்டாலினே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது விஜய் பரந்தூர் திட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதார் என தகவல் வெளியாகியுள்ளது.