ARTICLE AD BOX
சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தெரிவிக்கையில் தொகுதி மறு சீரமைப்பு சம்பந்தப்பட்ட கூட்டம் நடப்பது வரவேற்கத்தக்கது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைக்கப்பட்டால் வட இந்தியாவில் ஒரு சில மா நிலங்கள் தமிழகம் தென் மாநிலங்கள்.உள்ளிட்ட பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறையும்.
இதையும் படியுங்க: காவல் நிலையத்தில் ஆபாச வீடியோ காட்டிய எஸ்ஐ.. யாருக்கு தெரியுமா? ஆடிப்போன காவல்துறை!
மக்கள் தொகை குறைவு அடிப்படையில் பிரிக்கப்பட்டால் நிச்சயம் தமிழகத்திற்கு பாதிப்பு. தமிழக முதல்வரின் முயற்சி பாராட்டுதல்குரியது. நீதிபதியின் விவகாரம் புரியாத புதிராகத்தான் உள்ளது இதற்கு விளக்கம் தர வேண்டியவர்கள் சுப்ரீம் கோர்ட் சார்ந்தவர்கள்.
தமிழகத்தில் கூலிப்படையினரின் கொலைகள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . தமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறுபவர்களை தடுக்க வேண்டாம் . போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் .
டெல்லியில் போராட்டம் நடத்த எவ்வாறு இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளதோ , அதற்கான இடத்தை தனியாக ஒதுக்கி போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறினார்