ARTICLE AD BOX
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது நண்பர் சந்திரசேகர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படியுங்க : இளம்பெண்ணை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் : கோவிலுக்கு சென்ற போது விபரீதம்!
இவர்கள் இருவரும் டாஸ்மாக் பாரில் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்த போது வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அதில் முதல்வர் குறித்தும், தி.மு.க எம்.பி கனிமொழி குறித்தும், துணை முதல்வர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாக பேசும் காட்சிகள் இருந்தது.
இதனை பார்த்த திமுக ஐ.டி விங் பொறுப்பாளர் சக்திவேல் என்பவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சிவாவையும், அவரது நண்பர் சந்திரசேகரனையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

7 months ago
57









English (US) ·