முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

1 week ago 14
ARTICLE AD BOX

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டம், அயன் கருவேப்பம்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த மனுவில், “எனது மகன் கார்த்தி. எனது மகனுக்கு, கடந்த ஜனவரி 26ஆம் தேதி சாந்தினி என்ற பெண்ணுடன், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால், மணப்பெண் சாந்தினிக்கு இந்த திருமணத்தில் முதலிலே விருப்பமில்லை என இப்போது தெரிகிறது. ஏனென்றால், அவர் வேறு ஒருவரைக் காதலிப்பதாக, திருமணம் முடிந்து முதல் இரவின் போதே எனது மகனிடம் தெரிவித்துள்ளார். எனவே, எனது மகன் கார்த்தி சாந்தினியை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டான்.

Poisoned Juice

ஆனால், மீண்டும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் எல்லாம் அப்பெண்ணிடம் பேசி, இந்த பிரச்னை சில நாட்களில் சரியாகிவிடும் எனக் கூறிவிட்டு, கார்த்தியின் வீட்டில் விட்டுச் சென்றனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி, சாந்தினி குளிர்பானத்தில் விஷம் கலந்து எனது மகன் கார்த்திக்கு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது கார்த்தி புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, இது தொடர்பாக அப்பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Good Bad Ugly Teaser தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!
  • Continue Reading

    Read Entire Article