ARTICLE AD BOX
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இத்தொடர் அபார வெற்றிப் பெற்ற நிலையில் இத்தொடரின் இரண்டாம் பாகமான “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரீஹானா. இவர் இதற்கு முன்பு “பொன்னி”, “ஆனந்த ராகம்” (சன் டிவி) போன்ற தொடர்களில் நடித்து வந்தார். மேலும் இவர் சின்னத்திரை நடிகர்களை குறித்து பல சர்ச்சையான கருத்துகளையும் தனது பல பேட்டிகளில் கூறிவந்தார்.

மோசடி வழக்கு
இந்த நிலையில் சென்னை பூந்தமல்லியைச்சேர்ந்த ராஜ் கண்ணன் என்ற தொழிலதிபர் ரீஹானா மீது மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது ரீஹானா, ஹபிபுல்லா என்பவரை திருமணம் செய்திருந்தார், ஆனால் அவரிடம் இருந்து விவாகரத்து பெறாமல் தன்னை திருமணம் செய்துகொண்டது தற்போது தெரிய வந்துள்ளதாக ராஜ் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ரீஹானாவுக்கு அவ்வப்போது கொஞ்ம் கொஞ்சமாக பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் இவ்வாறு மொத்தமாக ரூ.18.5 லட்சம் கொடுத்துள்ளதாகவும் அப்புகாரில் குறிப்புட்டுள்ளார்.
அந்த வகையில் ரீஹானா, அவரது தாயார் மும்தாஜ், அவரது முதல் கணவர் ஹபிபுல்லா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது பணத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் எனவும் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார் ராஜ் கண்ணன். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் ரீஹானா, அவரது தாய் மற்றும் அவரது முதல் கணவர் ஆகியோரை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகின்றன.
