ARTICLE AD BOX
வெற்றிக் கூட்டணி!
“மாமன்னன்” திரைப்படத்தை தொடர்ந்து வடிவேலு-ஃபகத் ஃபாசில் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்த “மாரீசன்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மறதி நோயால் பாதிக்கப்பட்ட வடிவேலுவிடம் பல லட்ச ரூபாய் பணம் இருப்பதை திருடனான ஃபகத் ஃபாசில் பார்த்துவிடுகிறார். அந்த பணத்தை எப்படியாவது ஆட்டையை போட்டுவிட வேண்டும் என நினைக்கிறார். வடிவேலு திருவண்ணாமலை பயணிக்க அவருடன் சேர்ந்து ஃபகத் ஃபாசிலும் பயணிக்கிறார். இறுதியில் ஃபகத் ஃபாசில் வடிவேலுவின் பணத்தை ஆட்டையை போட்டாரா? இல்லையா? என்பதுதான் கதை.
இத்திரைப்படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும் இத்திரைப்படத்தின் திரைக்கதையில் சற்று தொய்வு இருந்ததால் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஈர்க்கவில்லை. வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பு அபாரமாக இருக்கிறது என்றாலும் இத்திரைப்படத்தின் திரைக்கதை சொதப்பலால் இத்திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது.

முதல் நாளில் பலத்த அடி?
இந்த நிலையில் “மாரீசன்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்திய அளவில் முதல் நாளில் ரூ.75 லட்சம் வசூல் செய்துள்ளதாம் “மாரீசன்”. இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரசிகர்களை இத்திரைப்படம் ஈர்க்கவில்லை. இது பாக்ஸ் ஆஃபிலும் எதிரொலித்துள்ளது தெரிய வருகிறது.
