ARTICLE AD BOX
மதராஸியின் ரிசல்ட்?
சிவகார்த்திகேயனின் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் “மதராஸி”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் இதில் வில்லனாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ்- சிவகார்த்திகேயனின் காம்போவில் உருவான திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இத்திரைப்படம்.

பரிதாபகரமான பாக்ஸ் ஆஃபிஸ்?
ஆனால் என்னதான் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் சற்று கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. அதாவது இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.18.52 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.9.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான “அமரன்” திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.42.3 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் “அமரன்” படத்தின் பாதி வசூலை கூட தொடவில்லை “மதராஸி” என்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
