ARTICLE AD BOX
திடீரென வந்த Ace!
விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “Ace” திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்திருந்தாலும் இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் இத்திரைப்படம் மே மாதத்தை ஒட்டி வெளிவரும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது.

ஆக்சன் கலந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம்
விஜய் சேதுபதியின் “Ace” திரைப்படம் ஆக்சன் கலந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்தின் கதை மலேசிய நாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டது.இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் காலை முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் மத்தியில் பாஸிட்டிவ் விமர்சனங்களே வலம் வருகின்றனர்.
“வெகு நாள் கழித்து விஜய் சேதுபதி ஜாலியாக ஒரு திரைப்படம் நடித்திருக்கிறார்” எனவும் “குடும்பத்துடன் இத்திரைப்படத்தை ஜாலியாக வந்து பார்க்கலாம்” எனவும் படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனினும் “படத்தில் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது. ஆனாலும் இரண்டாம் பாதியை நன்றாக விறுவிறுப்பாக கொண்டுசென்றுள்ளனர்” எனவும் பலர் கூறுகின்றனர். மேலும் “யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கதாநாயகி ருக்மிணியை அழகாக காட்டியிருக்கிறார்கள்” என ரசிகர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
