முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

1 month ago 46
ARTICLE AD BOX

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள “வீர தீர சூரன் பாகம் 2” திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியானது.அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படம்,ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கதையம்சத்தைக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்க: யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

கதை கரு

மதுரை ஊர்திருவிழாவில்,இரு பெருந்தலைவர்களுக்குள் மோதல் வெடிக்கிறது.இந்த மோதலை காரணமாக வைத்து,போலீஸ் அதிகாரி (எஸ்.ஜே.சூர்யா) சூழ்ச்சிகளை அமைக்கிறார்.

இந்த மோதலுக்கிடையில்,ஒரு பெருந்தலைவர் விக்ரமின் (மளிகைக் கடை உரிமையாளர்) உதவியை நாடுகிறார்.சாதாரண வியாபாரியை இந்த தலைவர்கள் ஏன் தேடி வருகிறார்கள்?அவருக்கு பின்னால் உள்ள பழைய சம்பவங்கள் என்ன? இதுவே படத்தின் கதையை நகர்த்துகிறது.

ப்ளஸ் & மைனஸ்

விக்ரம் எப்போதும் தனது கதாபாத்திரத்திற்காக முழு உழைப்பையும் கொடுப்பவர்.ஒரு குடும்பஸ்தனாக,மனைவியை நேசிக்கும் கணவராக,குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் வீரராக,இவர் வெவ்வேறு மனநிலைகளை அசால்டாக வெளிப்படுத்தியுள்ளார்.ரசிகர்கள் இபபடத்தை விக்ரமின் கம்பேக் படமாக கருதுகின்றனர்.

விக்ரமின் மனைவியாக துஷாரா விஜயன்,தனது அப்ளாச் அள்ளும் நடிப்பால், ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.தன் கணவருக்கும்,வில்லன்களுக்கும் இடையே குழப்பமடைந்த மனநிலையை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா தனது வில்லத்தனத்தை கலக்கலாக செய்துள்ளார். சூழ்ச்சி,வன்மம்,கோபம் என அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தி,திரையரங்கில் கலக்கல் சம்பவம் கொடுத்திருக்கிறார்.

மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு,தமிழில் தனது முதல் படமான வீர தீர சூரன் பாகம் 2 மூலம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரம் நல்ல ரேஞ்சுடன் அமைய, அவரது நடிப்பும் உணர்ச்சிகரமாக இருந்துள்ளது.நெகட்டிவ் கதாபாத்திரமாக வந்தாலும்,சில முக்கியமான இடங்களில் இவர் தன் அசாத்திய திறமையை நிரூபித்துள்ளார்.

பின்னணி இசை படத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசை பல இடங்களில்மிரட்டலாக அமைந்துள்ளது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் மிகவும் உணர்வுப்பூர்வமான நேர்த்தியை கொடுக்கின்றது.

முதல் பாதியில் திரைக்கதை வேகமாக செல்கிறது,ஆனால் இரண்டாம் பாதியில் சிறிது மெதுவாகிறது.ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் சிறிது இறுக்கம் தேவைப்பட்டிருக்கும். எடிட்டிங் கூட இன்னும் கொஞ்சம் கோர்சாக இருந்திருக்கலாம். முக்கியமான சண்டை காட்சிகள் துப்பாக்கிச் சூடு,கார் வெடிக்கும் காட்சி போன்றவை மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில்,வீர தீர சூரன் பாகம் 2 நல்ல கதையமைப்புடன்,ஆக்ஷன், த்ரில்லர் என மிக விறுவிறுப்பாக நகரும் படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.இப்படத்தின் மூலம் பழைய விண்டேஜ் விக்ரமை ரசிகர்கள் திரையில் காணலாம்.

  • Manoj Bharathiraja Death யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!
  • Continue Reading

    Read Entire Article