ARTICLE AD BOX
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக உள்ளவர் சல்மான் கான். இவர் நடிப்பில் சிக்கந்தர் படம் ரம்ஜானை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்க: அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!
அடுத்து அட்லீ படத்தல் நடிக்க உள்ளார். 1988 முதல் தற்போது வரை சினிமாவில் கோலோச்சி வரும் சல்மான், தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை ராக்கி சாவந்த் கூறியபோது, 28 வயதே ஆன பாகிஸ்தான் நடிகையை சல்மான் திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ராக்கி சாவந்த்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.