முருக பக்தர் மாநாட்டுக்கு வரும் விஜய் : அப்போ கூட்டணி உறுதி? நயினார் நாகேந்திரன் தகவல்..!!

3 weeks ago 24
ARTICLE AD BOX

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசியதாவது, பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்களின் மகள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அதில், ஒருவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் என்பது மிகவும் வருத்தம் வேதனைக்கு உரிய செய்தி.

இதையும் படியுங்க: ஓடி, ஓடி ஏழைகளுக்கு உதவி செய்வா.. RCB கூட்ட நெரிசலில் இறந்த இளம்பெண்ணின் உடலை பார்த்து கதறிய சொந்தங்கள்!

பெங்களூரில் இந்த இந்த நிகழ்விற்கு சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் இருந்தது தான் உயிரிழப்பிற்கு காரணம்.மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த காலங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது பாஜக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பாக நடத்தி இருக்க வேண்டிய நிகழ்வை சரியாக கர்நாடகா அரசு செய்யவில்லை.

தமிகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கின்றது. திமுக ஆட்சி இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. அதுவரை விவசாயிகளிக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.பாட்டாளி மக்கள் கட்சியில் நடப்பது உட்கட்சி பிரச்சினை.

குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சென்று இருப்பது தனிப்பட்ட முறையில், பாஜகவிற்கும் அதற்கும் தொடர்பு இல்லை. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கைதானவர்கள் 19 கொலைகள் செய்து இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்து இருக்கின்றனர். ஏற்கனவே கைதாகி இருப்பவர்கள் நிரபராதிகளா? தவறே செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களா?

Vijay coming to Muruga devotee conference... Nayinar Nagendran information..!!

மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தான் அமித்ஷா வருகின்றார். முருக பக்தர் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின்ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் இருந்து திமுக அரசை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு, தவெக தலைவர் விஜய்க்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என நயினார் நகேந்திரன் தெரிவித்தார்.

  • hight court ordered vishal to return money to lyca with 30% interest நிம்மதியா கல்யாணம் பண்ண விடுறாங்களா? திடீரென விஷால் மீது குண்டை தூக்கி போட்ட நீதிமன்றம்? 
  • Continue Reading

    Read Entire Article