ARTICLE AD BOX
வெளியானது குபேரா
தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோது அதிகளவு வரவேற்பு இருந்தது. நிச்சயம் இத்திரைப்படம் தனுஷின் கெரியரில் சிறந்த திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆதலால் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
 இந்த முறையும் தனுஷ் ஏமாத்திட்டாரு?
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளிவந்த ரசிகர்கள் இத்திரைப்படத்தை குறித்து என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம். “படம் Average ஆகத்தான் இருக்கிறது. ஒரு முறை வேண்டுமென்றால் பார்க்கலாம். தனுஷ் நடிப்பு அபாரமாக இருந்தது” என ஒருவர் கூறினார்.
மற்றொருவர், “தனுஷ் பிச்சையெடுக்கிற ஒரே ஒரு காட்சிதான் படத்தில் நன்றாக இருந்தது. மற்றது எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, பிச்சைக்காரர்களுக்கு இத்திரைப்படம் நன்றாக கன்னெக்ட் ஆகும்” என கூறினார்.
மேலும் ஒரு ரசிகர் பேசியபோது, “படம் மிகவும் மோசமாக இருக்கிறது. மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க” என்று புலம்பினார். மற்றொருவர் ஒரு படி மேலே சென்று, “தெலுங்கு படமே நடிக்க சொல்லாதீங்க. தனுஷை தமிழிலேயே நடிக்க சொல்லுங்க பிளீஸ்” என்று புலம்பினார். இவ்வாறு ரசிகர்கள் பலரும் குபேரா திரைப்படம் சுமார் என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
                        4 months ago
                                57
                    








                        English (US)  ·