ARTICLE AD BOX
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக அவர் அருகில் உள்ள அரச மரத்தடியில் காற்றுவாங்க அமர்ந்து இருப்ததாக தெரிகிறது.
இதையும் படியுங்க: தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!
இந்த நிலையில் அங்கு வந்த அவரது மகன் வழி பேரன் சத்தியமூர்த்தி மூதாட்டி மனோண்மணியிடம் மது அருந்த பனம் கேட்டு உள்ளார்.
இதற்கு என்னிடம் பணம் இல்லை என்று பாட்டி மனோண்மணி மறுத்ததால் சிவக்குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் கழுத்தை அருத்து அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் துடி, துடித்து கொண்டு இருந்த மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்க்கனவே மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இதை தொடர்ந்து சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பேரன் சிவக்குமாரை தேடி வருகின்றனர். மது அருந்த பணம் தர மறுத்ததால் மூதாட்டியை பேரன் அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

7 months ago
59









English (US) ·