மூத்த மகனுக்கு பிரம்மாண்டம்.. இளைய மகனுக்கு எளிமை.. பாரபட்சம் காட்டினாரா நாகர்ஜூனா?!

3 months ago 47
ARTICLE AD BOX

நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவின் 2வது திருமணம் பெரும் பரபரப்பு இடையே நடந்து முடிந்தது. நடிகை சோபிதாவை இரண்டாவது மனைவியாக்கினார்.

இதனிடையே நாகர்ஜூனா – மனைவி அமலாவின் ஒரே மகான அகில் அக்கினேனிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர் ஏற்கனலே ஜைனப் ரவ்டஜி என்பவரை காதலித்து வந்தார்.

இதையும் படியுங்க: கோவையில் வாங்கிய ஆர்மோனியப் பெட்டி… எமோஷனலாக பேசிய இளையராஜா!!

அகிலை விட 9 வயது மூத்தவர் ஜைனப். இந்த தகவல் வெளியாகி ஏற்கனவே சர்ச்சையான நிலையில், விமர்சனத்தை ஓரம் தள்ளி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

விடியற்காலை 3.30 மணியளவில் எளிமையாக நாகர்ஜூனா வீட்டில் நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

நாளை 8ஆம் தேதி வெகு விமர்சையாக வரவேற்பு நிகழ்ச்சி, நார்கஜூனாவுக்கு சொந்தமான அன்னபூரனா ஸ்டூடியோவில் நடைபெற உள்ளது.

The auspicious event at Nagarjuna's house

நாக சைதன்யா – சமந்தா திருமணத்தை ஊரே மெச்சும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடத்திய நாகர்ஜூனா, சமந்தா பிரிந்த பிறகு இரண்டாவது திருமணத்தையும் விமர்சையாக நடத்தியிருந்தார். ஆனால் இளைய மகனின் திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

  • Nagarjun Son Akhil Wedding மூத்த மகனுக்கு பிரம்மாண்டம்.. இளைய மகனுக்கு எளிமை.. பாரபட்சம் காட்டினாரா நாகர்ஜூனா?!
  • Continue Reading

    Read Entire Article