மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

5 days ago 10
ARTICLE AD BOX

இந்தியா – நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் நடக்கவுள்ள ஆட்டத்தில் மோதவுள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

எனவே, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரம், இருநாட்டு ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

காரணம், இந்த சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை கேப்டனும், தொடக்க வீரருமான சுப்மன் கில், “இதுவரை நாங்கள் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து, சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது பற்றி மட்டுமே விவாதித்து வந்தோம்.

Rohit Sharma Virat Kohli Kane Williamson

எனவே, இது குறித்து அவர் என்னிடமோ அல்லது அணியிடமோ இதுவரை பேசவில்லை. ஏன், ரோகித் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார் என்று கூட நான் நினைக்கவில்லை” எனக் கூறியுள்ளார். முன்னதாக, 2019 உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் 2023 உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ரோகித் தலைமையிலான நீலப்படை தோல்வியுற்றது.

இதையும் படிங்க: ரசிகர்களின் ஆறாத வடு..25 வருடத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம்..பதிலடி கொடுக்குமா இந்தியா.!

அதேபோல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடிவரும் ரோகித் சர்மா, சமீப காலமாக ரன்களைக் குவிப்பத்தில் பின்னடைவைச் சந்தித்தார். மேலும், வெறும் 104 ரன்கள் குவித்து 26வது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா உள்ளார். அதேபோல், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கேன் வில்லியம்சனுக்கும் இதுவே கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் வென்ற பிறகு டி20 போன்ற போட்டியில் இருந்து மூத்த வீரர்களான கோலியும், ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். எனவே, இன்று போட்டி முடிவுற்ற பிறகு கோலியும் ஒருவேளை ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிகிறது.

  • Ilayaraja கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!
  • Continue Reading

    Read Entire Article