மொட்டை மாடியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தலைகளுடன் வந்த கணவன்.. பதற வைத்த சம்பவம்!

1 month ago 41
ARTICLE AD BOX

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தில் வசித்து வரும் கொளஞ்சி தனது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் இருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர்.

அளித்த புகாரில் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கொளஞ்சியின் இரண்டாவது மனைவி லட்சுமி என்பதும், அவரது அருகிலிருந்த செல்போனை எடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த செல்போன் அதே கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பதும் தெரியவந்தது.

லட்சுமி மற்றும் தங்கராசு இடையே உள்ள கள்ளக்காதல் விவகாரம் குறித்து தெரிந்து லட்சுமியின் கணவரான கொளஞ்சி நேற்று வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற நிலையில் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட லட்சுமி தனது கள்ளக்காதலான செல்வராசு-வை வீட்டிற்கு அழைத்து இவரும் லட்சுமியின் வீட்டு மொட்டை மாடியில் தனிமையில் இருந்துள்ளனர்.

ஊருக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற கொளஞ்சி திடீரென வீட்டிற்கு வந்து மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது லட்சுமியும் அவரது கள்ளக்காதலான தங்கராசுவும் தனிமையில் இருந்ததை பார்த்த கொளஞ்சி தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் முதலில் தங்கராசுவின் தலையை வெட்டி சாய்த்தார்.

பின்னர் லட்சுமியின் தலையையும் வெட்டி சாய்ந்து இருவரது தலையையும் கட்டப்பையில் போட்டு எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து இருசக்கர வாகனம் மூலமாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் சென்றார்.

அங்கிருந்து வேலூர் சென்று வெட்டி கொண்டு வந்த இருவரின் தலையுடன் வேலூர் மத்திய சிறைச்சாலையில் சரணடைந்தார். சிறை நுழைவாயிலில் சிறை காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது நான் கொலை செய்து விட்டதாகவும் என்னை சிறையில் அடைக்கும்படி கூறியுள்ளார்.

மேலும் கையில் வைத்திருந்த பையில் இருவரின் தலைகளை துண்டித்த நிலையில் எடுத்துக் காண்பித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பாகாயாம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் கொளஞ்சி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இது குறித்து வேலூர் மாவட்ட காவல்துறையினர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கள்ளக்காதலன் தங்கராசு

தொடர்ந்து வெட்டி கொலை செய்யப்பட்ட லட்சுமி மற்றும் தங்கராசு ஆகிய இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கணவன் கொளஞ்சி

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடைபெற்ற இடத்தில் உள்ள தடயங்களை போலீசார் சேகரித்து தொடர்ந்து இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • பாக்ஸ் ஆஃபிஸில் குழி தோண்டி படுத்த அனுஷ்காவின் காட்டி? அடி ரொம்ப ஓவரோ?
  • Continue Reading

    Read Entire Article