ARTICLE AD BOX
சம்பவ இடத்திற்கு விரைந்த சோனு சூட்
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சூட் மும்பை-நாக்பூர் சாலையில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: அதிர்ச்சி.! ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகையின் நிர்வாண வீடியோ லீக்..ஆண் நண்பரின் சதியா.!
மார்ச் 24, 2025 அன்று இரவு,அவர் தனது சகோதரி மற்றும் மருமகனுடன் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சோனாலி மற்றும் அவரது மருமகன்,நாக்பூரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் அறிந்ததும்,சோனு சூட் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
சோனுவின் தகவல் தொடர்பாளரை தொடர்பு கொண்ட போது “சோனாலி விபத்தில் சிக்கியிருப்பது உண்மை எனவும்,சோனு தற்போது தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் சொன்ன தகவலின் படி,சோனாலியும் அவரது மருமகனும் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் சோனாலியின் சகோதரி சிறு காயங்களுடன் விபத்திலிருந்து தப்பியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மோசமான விபத்தால் பாலிவுட் நடிகர் சோனு சூட் மிகுந்த அதிருப்தியில் உறைந்துள்ளார்.
