ARTICLE AD BOX
மலையாளத்தின் முன்னணி நடிகர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “கூலி” திரைப்படத்தில் Dayal என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சௌபின் சாஹிர். இவர் மலையாளத்தின் முன்னணி நடிகராவார். குறிப்பாக “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் வியக்க வைத்தது. இந்த நிலையில் “மோனிகா” பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பட்டையை கிளப்பிய மோனிகா பாடல்
“கூலி” திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இதில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த உடையும் அவரது நடனமும் ரசிகர்களை சொக்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் நடிகர் சௌபின் சாஹிர் தனது குழந்தைகளுடன் “மோனிகா” பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்த பலரும் “கியூட்” என்று கம்மண்ட் செய்து வருகின்றனர்.
