ARTICLE AD BOX
சர்ச்சையான நித்யா மேனன் வீடியோ
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், தமிழிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் தனுஷுடன் “இட்லி கடை”, விஜய் சேதுபதியுடன் “தலைவன் தலைவி” ஆகிய திரைப்படங்களில் நித்யா மேனன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நித்யா மேனனிடம் ரசிகர் ஒருவர் கைக்கொடுக்க வந்தார். ஆனால் பதிலுக்கு நித்யா மேனன் கைக்கொடுக்காமல் வணங்கிவிட்டுச் சென்றிவிடுவார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நித்யா மேனன் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

கைக்கொடுப்பது பிடிக்காது
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நித்யா மேனன், “ஒரு நிகழ்ச்சிக்கு போனால் ரசிகர்கள் கைக்கொடுக்கச் சொல்கிறார்கள். இதனை சாதாரண பெண்ணிடம் கேட்கமாட்டார்கள். ஒரு நடிகையை எளிதாக தொட்டுவிடலாம் என்கிற எண்ணம்தான் அவர்களிடம் இருக்கிறது.
பொதுவாக தொட்டுப் பேசுவது எனக்கு பிடிக்காது. யாராவது என்னிடம் கைக்கொடுக்கச் சொன்னால் மறுத்துவிடுவேன். எனக்கு யாருக்கு கைக்கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு மட்டும்தான் கைக்கொடுப்பேன்” என்று பேசியுள்ளார்.