யாரையும் விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது!- மோடியை சாடிய ஈவிகேஎஸ்!

8 months ago 129
ARTICLE AD BOX

பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி பத்தி மக்களுக்கு நன்றாகவே தெரியும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்ததாவது,
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் நீட் தேர்வு விலக்கு குறித்து பேசி உள்ளார் அதை நான் வரவேற்கிறேன். பாஜகவுக்கு யாரையும் விமர்சனம் செய்வதற்கு அருகதை கிடையாது. அவர்களின் 10 ஆண்டுகால ஆட்சி மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். மிகவும் மோசமான ஆட்சி பாஜக. நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்தையும் பாஜக அரசு தனியார் மையமாகிவிட்டது.கொஞ்சம் அயர்ந்தால் ராணுவத்தையும் தனியார் மையம் ஆக்கிவிடுவார்கள். அதனால் மோடியை முதலில் சீக்கிரமாக பதவியில் இருந்து தூக்கினால் தான் இந்த இந்தியாவிற்கு நல்ல நாள் ஆக அமையும்.

பாஜகவை பொருத்தவரை நாட்டிற்காக போராடிய தலைவர்கள் பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியாது. மோடியை பொறுத்தவரை 1980 ல் காந்தியடிகளின் படத்தைப் பார்த்து தான் அவரைப் பற்றிய தெரிந்து கொண்டார் என்பதை அவரே கூறி இருக்கிறார். இந்த நிலைமையில் தான் மோடி உள்ளார். நாட்டுக்காக போராடிய தலைவர்களை கொண்டாட வேண்டுமே தவிர விமர்சிக்க கூடாது என்று பரபரப்பாக பேட்டி அளித்துச் சென்றார்.

The station யாரையும் விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது!- மோடியை சாடிய ஈவிகேஎஸ்! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article