யார் அங்கே.. எட்டிப் பார்த்த கணவனை கொன்ற மனைவி.. என்ன நடந்தது?

1 month ago 38
ARTICLE AD BOX

தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த காசாங்காடு தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் விஸ்வலிங்கம் மகன் பிரகாஷ் (40). கூலித் தொழிலாளியான இவர், கடந்த மார்ச் 13ஆம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதை போலீசாரிடம் தெரிவிக்காமல் மறுநாள் 14ஆம் தேதி பிரகாஷ் உடலை அவரது மனைவி நாகலெட்சுமி (35) வற்புறுத்தலின்பேரில் உறவினர்கள் எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாகலெட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (25) என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளதை பிரகாஷ் தெரிந்து கொண்டதால், பிரகாஷை நாகலெட்சுமி மற்றும் வீரக்குமார் இருவரும் சேர்ந்து கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டது போல் ஊராரை நம்பவைத்து நாடகம் ஆடியுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

மேலும், யாருக்கும் சந்தேகம் வருவதற்கு முன்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நாகலெட்சுமியின் நாடகத்தை நம்பி பிரகாஷ் உடலை எரித்துவிட்டதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுக்கூர் போலீசார் நாகலெட்சுமியை அழைத்து விசாரணை நடத்தினர்.

Thanjavur murder

அப்போது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நாகலெட்சுமி தனது கள்ளக்காதலன் வீரக்குமாருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது நாகலெட்சுமி கணவன் பிரகாஷ் பார்த்துவிட்டதால், வேறு வழியின்றி பிரகாஷின் காலை நாகலெட்சுமி பிடித்துக் கொண்டுள்ளார். பின்னர், பிரகாஷின் கழுத்தை வீரக்குமார் நெறித்துக் கொன்றுவிட்டு தற்கொலை செய்யும்படி தொங்க விட்டுள்ளார்.

இதையும் படிங்க: வதந்திகளை தயவு செய்து பரப்பாதீங்க…அஸ்வத் மாரிமுத்து கோரிக்கை.!

அதன் பிறகு, கணவர் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதாக நாகலெட்சுமி நாடகமாடியது தெரிய வந்துள்ளது. உடனடியாக, இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகலெட்சுமியை கைது செய்தனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட வீரக்குமார், தென்காசி பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்துவரும் நிலையில், அவரைக் கைது செய்ய போலீசார் சென்றுள்ளனர். இதனிடையே, இறந்துபோன பிரகாஷிற்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

  • Ashwath Marimuthu rumors வதந்திகளை தயவு செய்து பரப்பாதீங்க…அஸ்வத் மாரிமுத்து கோரிக்கை.!
  • Continue Reading

    Read Entire Article