ARTICLE AD BOX
சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை தொடர்வதற்காக சென்னையில் விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி, 49 சட்டமன்ற தொகுதிக்கு பயணம் சென்றுள்ளேன். தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
இதையும் படியுங்க: பாஜக பிரமுகரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததே நான்தான்… சிக்கன் ரைஸ்காக வெளியான உண்மை!
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் கடன் பெற முடியாமல் சிரமம் இருந்தது. இது குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். சிவில் முறை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதனை சரி செய்வதாக கூறியுள்ளார். அதன் பின்னர் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. பழையபடி வங்கியில் கடன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த கட்சியோடு எந்த கட்சி கூட்டணி சேருகிறது என அவர்களிடம் தான் கேட்க வேண்டும். யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு கூறியது பத்திரிக்கையாளர்களாக உங்களுக்கே தெரியும்.
இது செய்தியை விறுவிறுப்பாக வேண்டாம். பரபரப்புக்காக கேள்வி கேட்க வேண்டாம். அது முடிந்து போன விஷயம். இந்தியா முழுவதும் மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

கல்விக்கான தொகையை மத்திய அரசு வழங்காததை குறித்து கேள்விக்கு, 1976 ஆண்டில் இருந்து இருக்கிறது. மத்திய பொது பட்டியலில் இருந்து ஏன் மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை.
அப்போதைய திமுக பாஜக கூட்டணியில் இருக்கும் போது என்ன செய்தார்கள் அதன் பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கும்போது என்ன செய்தார்கள். அப்போது அவர்கள் நினைத்திருந்தால் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி இருக்கலாம்.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உள்ளது. தேர்தல் நெருங்கும் போது யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என தெரியும் என தெரிவித்தார்.
