யோகி பாபு சொன்னது எல்லாம் பொய்- பொதுவெளியில் திடீரென போட்டுடைத்த பிரபலம்!

1 month ago 29
ARTICLE AD BOX

முன்னணி காமெடி நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் தனது கெரியரை தொடங்கியவர் யோகி பாபு. அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் வந்தார். 

yogi babu told that he is in writers union for 10 years is lie said by bismi

தொடக்கத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த யோகி பாபு, ஒரு கட்டத்திற்குப் பிறகு காமெடி ரோலில் கலக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த்,  விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக ஜொலித்த யோகி பாபு பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். 

அவர் சொன்னதெல்லாம் பொய்

அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய யோகி பாபு, “எனக்கு கதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. எழுத்தாளர் சங்கத்தில் 10 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன்” என கூறினாராம். இந்த நிலையில் சமீபத்தில் தனது வலைப்பேச்சு வீடியோவில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி இது குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.

அதாவது இன்று காலை எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர் பிஸ்மிக்கு ஃபோன் செய்தாராம். அவர் “யோகி பாபு இப்படி ஒரு அப்பட்டமான பொய்யை கூறியிருக்கிறார், 2021 ஆம் ஆண்டின் முடிவில்தான் யோகி பாபு எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்தார்” என பிஸ்மியிடம் கூறினாராம். 

yogi babu told that he is in writers union for 10 years is lie said by bismi

தான் ஒரு கதை எழுதப்போவதாகவும் அதற்காகத்தான் எழுத்தாளர் சங்கத்தில் சேர முடிவெடுத்ததாகவும் யோகி பாபு கூறினாராம். ஆனால் எழுத்தாளர் சங்கத்தின் விதிமுறைகளின்படி யோகி பாபு அச்சங்கத்தில் சேர முடியாதாம். எனினும் அவர் ஒரு சினிமா பிரபலம் என்பதனாலும் அவர் அச்சங்கத்துக்கு ரூ.50,000 நன்கொடை கொடுத்ததாலும் அவரை சேர்த்துக்கொண்டார்களாம். இவ்வாறு யோகி பாபு அச்சங்கத்தில் சேர்ந்தே 4 ஆண்டுகள்தான் ஆகிறது என அந்நபர் கூறியதாக பிஸ்மி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். 

  • ravi mohan is in the circle of enforcement department அமலாக்கத்துறை வளையத்தில் திடீரென சிக்கிய ரவி மோகன்? இப்படியா ஒருத்தருக்கு பிரச்சனை வரணும்?
  • Continue Reading

    Read Entire Article